Home ஆன்மீகம் ஸ்படிக மாலையினை அணிவதினால் கிடைக்கும் நன்மைகள்…!

ஸ்படிக மாலையினை அணிவதினால் கிடைக்கும் நன்மைகள்…!

834
0
crystal
Share

ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையைச் சார்ந்தது. இந்த ஸ்படிகம் பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் புதையுண்டு நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் ஆனவை. ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இந்த ஸ்படிகம் சிறப்பு வாய்ந்தவை.

ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்படிக மாலையை எந்த ஒரு உலோகத்தினோடும் சேர்த்து ஸ்படிக மணியைக் கோர்க்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் ருத்ராட்சம் உள்ளிட்டவையும் சேர்த்தல் கூடாது. தங்கம் மற்றும் வெள்ளியுடன் மட்டுமே இந்த ஸ்படிக மணியை அணிய வேண்டும்.

ஸ்படிக மாலையைக் குளிர் பிரதேசங்களில் உள்ளவர்கள் மற்றும் குளிர்ச்சி தன்மை கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த ஸ்படிகம் அணிவதைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. இவர்களைத் தவற சிறிய குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் கூட அணியலாம்.

அதுமட்டுமில்லாமல் குறிப்பாக அதிகமாகக் கோபப்படும் நபர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடலில் அதிகமான உஷ்ணம் உள்ளவர்கள் இதைக் கட்டாயம் அணிந்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்படிக மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களைச் சுற்றி இருப்பதால் நல்ல எண்ணங்களைத் தூண்டச் செய்யும். நம் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க உதவும்.

தெளிவான சிந்தனையைத் தரக்கூடியவை, தன்னம்பிக்கையை அதிகரிக்கும், அதோடு உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் நம்மிடம் எப்போதும் எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களும் விலகி ஓடும். இந்த ஸ்படிக மாலை அணிவதால் மனதில் உள்ள பாரம், மன அழுத்தம் போன்றவை குறையும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here