Home டெக்னாலஜிஸ் AUTOMATION எலக்ட்ரான் ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வி!….

எலக்ட்ரான் ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வி!….

477
0
Share

7 செயற்கை கோள்களை எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராக்கெட் லேப் என்பது அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ராக்கெட் போன்ற விண்வெளி சாதனங்களை தயாரித்தும், ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் செய்து வருகிறது. எனவே தனது வாடிக்கையாளர்களின் செயற்கை கோள்களை எலக்ட்ரான் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகின்றனர்.

கடந்த 2017-ல் தொடங்கிய இந்த முயற்சியின் முடிவாக இதுவரை 11 எலக்ட்ரான் ராக்கெட் செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 7 செயற்கை கோள்களுடன் கூடிய எலக்ட்ரான் ராக்கெட் ஒன்று நியூசிலாந்தின் மாகியா தீபக்கற்கத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ராக்கெட் செயலிழந்து செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராக்கெட் லேப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இந்த சம்பவத்திற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், விரைவில் 7 செயற்கை கோள்களும் எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here