Home செய்திகள் இந்தியா HIV யும் கொரோனவும் ஒரே மாதிரி தான் ? நாம் தான் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்… WHO அறிவிப்பு !

HIV யும் கொரோனவும் ஒரே மாதிரி தான் ? நாம் தான் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்… WHO அறிவிப்பு !

437
0
Who
Share

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரசிற்கு இதுவரை  4.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  அதில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,98,000 – ஆகவும் உள்ளது. இதன் பிடியில் அனைத்து உலக நாடுகளும் சிக்கியுள்ளது. மேலும் இதற்கு ஏராளமானோர்  மருந்து கண்டுபிடித்து வருகின்றனர் மற்றும் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்கின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கினால் இது வரை பில்லியின் கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதார நிலை சர்வதேச அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் என இரண்டையும் கட்டுப்படுத்த முடியாத சில நாடுகள் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுத்து வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் வைரஸ் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதேபோல் வைரசை முழுவதும் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிய சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் ஊரடங்கை முழுமையாக விலக்கின. ஆனால் அங்கும் தற்போது அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஊரடங்கைத் திரும்பப் பெறக் கூடாது அவ்வாறு பெற்றால்  இரண்டாவது மிகப்பெரிய பாதிப்புக்கு வழிவகுக்கும் எனத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுகிறது. ஆனால் அதையும் மீறி தங்கள் நாட்டுப் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சில நாடுகள் ஊரடங்கில் தளர்வு அறிவித்துள்ளன.
இதனால் வைரசை முழுமையாக அழிக்க முடியாது நாம் அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
CEO OF WHO
இது சர்வதேச அளவில் அதிகமாகக் கவனம் ஈர்த்துள்ளது. நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால தலைவர் மைக்கேல் ரியான், `முதன்முறையாக ஒரு புதிய வைரஸ் நுழைந்துள்ளது. நாம் அதை எப்போது முற்றிலும் அழிப்போம் என்பது கணிக்கமுடியாது. நம் சமூகத்தில் ஏற்கெனவே உள்ள வைரஸ்களைப் போல கொரோனாவும் மாறக்கூடும். மேலும் இதை முற்றிலுமாக அழிக்க முடியாது.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட HIV வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் நாம் வைரசைப் புரிந்துகொண்டு அதனுடன் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பழகிக் கொண்டோம். அதே போல் தான் இனி கோவிட் -19 வைரசுடனும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பேசிய அவர், “பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு எதிரான வெவ்வேறு நடவடிக்கைகளிலிருந்து வெளியேறி வருகின்றன.ஆனால் உலகை இயல்பு நிலைக்குத் திருப்பும் பாதையில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here