Home செய்திகள் இந்தியா கொரோனாவை விட கொடியன் அம்பன் ! மேற்கு வங்க முதல்வர் கவலை…

கொரோனாவை விட கொடியன் அம்பன் ! மேற்கு வங்க முதல்வர் கவலை…

486
0
mamtha
Share

4 மணிநேரம் கோரத்தாண்டவம், 170 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்று கரையை கடப்பதற்குள் பெருநாசத்தை விளைவித்த அம்பன் புயல்…

20 ஆண்டுகளுக்கு பிறகு அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புயல் சூப்பர் புயலாக மாறியது. இந்த அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தின் டிக்காவுக்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுக்கும் இடையே கரையை கடந்தது.

ambhanபுயல் கரையை கடக்கும் போது மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மரங்களும் மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. வீசிய அதி வேக காற்றால் அங்கு உள்ள டெல்டா பகுதிகள் மற்றும் கொல்கத்தாவின் நகர்ப்புற பகுதிகளிலும் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்படுத்திவிட்டது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பாதிப்புகளை எல்லாம் சரிப்படுத்த சிறிது நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் OLA !

ambhan floodமேலும் புயல் கரையை கடந்த பிறகு இரு மாநிலங்களிலுமே கடுமையான மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெள்ள அபாயம் இருப்பதால் மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசாவில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ எந்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

ambhanமேற்கு வங்கத்தில், கொரோனா வைரஸை காட்டிலும் மிக மோசமான பாதிப்புகளை அம்பன் புயல் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதையும் சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும். தயவுசெய்து இதில் அரசியல் ஏதும் செய்யாமல் மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here