Home செய்திகள் இந்தியா புதிய ஏவுகணை இந்தியாவில் தயாரிப்பு பணி தீவிரம் !

புதிய ஏவுகணை இந்தியாவில் தயாரிப்பு பணி தீவிரம் !

372
0
Abhyas DRDO
Share

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை இன்னும் 4 – 5 ஆண்டுகளில் தயாராகும் என, DRDO எனப்படும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர், ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதன் மாதிரி ஏவுகணை சோதனை, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக DRDO, தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்திருப்பதாவது: உலகளவில் வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணைகளில், சப்சோனிக், சூப்பர்சோனிக் வகைகளுக்கு அடுத்ததாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாகச் செல்லக்கூடியது.

தற்போது உலகிலேயே மிகவும் வேகமாகச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையாக நம் நாட்டின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணை உள்ளது. ஆனால் தற்போது, அதை விட வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான மாதிரி பரிசோதனை, செப்., 7ல் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக உள்நாட்டில் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி, அடுத்த, 4 – 5 ஆண்டுகளுக்குள் ஏவுகணைகள் தயார் செய்யப்படும். இந்த புதிய ஏவுகணையானது, தற்போதுள்ள பிரம்மோஸ் ஏவுகணையை விட, இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் திறன் உள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு, ஒலியானது, பூமியின் ஒரு வினாடியில், 342 மீட்டர் தூரத்தைக் கடக்கும்.

ஜெர்மனியில் 745 கிலோ எடை உள்ள பூசணிக்காய்…

பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட, 2.8 மேக் திறன் அதிகம் கொண்டது. புதிய ஏவுகணை, 6 – 8 மேக் திறன் உள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here