Home செய்திகள் இந்தியா டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ShameOnVijaySethupathi

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ShameOnVijaySethupathi

331
0
Share

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் அதிவேகமாக இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் ஆவர். தற்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் படமாக இயக்கவுள்ளார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அதில் முரளிதரன் போன்று விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர்.

இந்தப் படம் குறித்து தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கக் கூடாது என பல தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தார்கள். சில தினங்களுக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்த பிறகு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் ஏற்படுத்தி தந்த இயக்குனர் சீனுராமசாமி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு டுவீட் செய்துள்ளார். இத்தகைய சூழலில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி, மோஷன் போஸ்டரும் வெளியானதால் இப்போது எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.


இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும், விஜய் சேதுபதி தன்னை ஒரு தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்பவர். அப்படியிருக்க அவர் எப்படி இதில் நடிக்க சம்மதித்தார், உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி என இன்று டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு அவரை திட்டும் வகையில் டிவீட் செய்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த ஹேஷ்டாக்கை ரீ-டுவீட் செய்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here