Home செய்திகள் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்த 4 நாடுகள் ! சீனாவை சுற்றி போர் கப்பல்கள் … பெரும் பதற்றம்…

அமெரிக்காவுடன் இணைந்த 4 நாடுகள் ! சீனாவை சுற்றி போர் கப்பல்கள் … பெரும் பதற்றம்…

1220
0
Trump
Share

கொரோனா வைரசால் உலக நாடுகள் அனைத்தும் பெரும்  நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீன கடல் பகுதியில் மற்ற நாட்டுப் போர்க் கப்பல்கள் ரோந்து வந்துள்ளது.

கொரோனா வைரசால் உலகமே பெரும் நெருக்கடியை  சந்தித்துள்ளது. மேலும் கொரோனா பிரச்சனையால் உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையில் பெரும் வாக்குவாதம் நிலவி  வருகிறது.  ஏனென்றால் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் முக்கிய காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இதற்குச் சீனா விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதனால் சீனா அமெரிக்கா இடையே  பிரச்சனை  விஸ்வரூபமாகி உள்ளது.WarShip

எல்லை சண்டை ஒரு பக்கம் :

இந்நிலையில் புதிய சண்டை வேறு நடந்து வருகிறது.  சீனாவின் தென் கடல் எல்லை யாருக்குச் சொந்தம் என்ற சண்டை காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா, மலேசியா, வியட்நாம் ஆகிய மூன்று நாடுகளும் கூறுகிறது.

இவ்வளவு காலம் இந்த கடல் எல்லையில் எல்லை மீறிய  போது அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தென் சீன கடல் எல்லையில் பெரிய அளவில் எந்த பதற்றம் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் முதல் முறையாகத் தென் சீன கடல் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் ஏற்படத் துவங்கி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக இந்த கடல் எல்லைக்குள் சீனா நாட்டின் Haiyang Dizhi என்ற போர்க் கப்பல்கள் ரோந்து சென்று வருகிறது.america china

நான்கு நாட்டுப் போர்க் கப்பல்

இதனை அறிந்த அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் பெரிய போர்க் கப்பல்களை சீன எல்லைக்குள் அனுப்பி உள்ளது. மேலும் அமெரிக்காவுடன் மலேசியா போர்க் கப்பல்களும் கூட்டுச் சேர்ந்துள்ளது. பிறகு வியட்நாம் போர்  கப்பலும் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து அங்கே ரோந்து பணிகளைக் கவனித்து வருகிறது. தற்போது அமெரிக்கக் கப்பலுடன் ஆஸ்திரேலியாவின் போர்க் கப்பலும் இணைந்தது.

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய போர்  கப்பல் இணைந்தது. இந்த கடல் எல்லை  பிரச்சனை  ஆஸ்திரேலியாவிற்கு முக்கியம் கிடையாது. ஆனால் அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா உதவக் காரணம் உள்ளது. கொரோனா வைரசால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவின் போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிறுவனங்களின் பங்கில் சிலவற்றைச் சீனா தன்வசமாக்கியுள்ளது.

இதனால் சீனா மீது ஆஸ்திரேலியா பெரும் கோபத்தில்  உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா புது சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது சீனாவை ஒடுக்கும் நோக்கத்தில் அமெரிக்காவிற்கு உதவ ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது. இதனால் தான் ஆஸ்திரேலியாவின் இரண்டு போர்க் கப்பல்கள் சீனாவிற்கு எதிராகக் களமிறக்கி உள்ளது. சீனாவை எதிர்த்து நான்கு நாட்டுப் போர் கப்பல்கள் ரோந்து செல்வது பெரும்  பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here