Home முகப்பு உலக செய்திகள் நிலாவில் 4ஜி, நோக்கியா அமைக்கிறது !

நிலாவில் 4ஜி, நோக்கியா அமைக்கிறது !

592
0
Share

நிலவில் 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதியை நிறுவ நோக்கியா நிறுவனத்திற்கு நாசா அனுமதி வழங்கியுள்ளது. எனவே இதற்கான பணிகளை துவங்க நோக்கியா நிறுவனத்திற்கு நாசா சார்பில் முதற்கட்டமாக 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்க மொத்தம் 37 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக எல்டிஇ \ 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதி கட்டமைக்கப்பட உள்ளது.

இதற்காக நோக்கியா சார்பில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், நிலவின் மேற்பரப்பில் உள்ள தொலைதூர தகவல் பரிமாற்றங்களை அதிவேகமாக மேற்கொள்ள உதவி செய்யும். இது மட்டுமில்லாமல் தற்சமயம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட சீரான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த 4ஜி கட்டமைப்பு வழிவகை செய்யும் என்று .

தோனியை திட்டி தீர்த்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் !

நாசா இலக்கின் படி 2028 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் பணிகளை மேற்கொள்ள செய்யும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என நாசா அதிகாரி ஜிம் பிரைட்ஸ்டைன் தெரிவித்துள்ளார் .

நோக்கியாவின் ஆராய்ச்சி பிரிவான பெல் லேப்ஸ், லூனார் ரோவர்களை வயர்லெஸ் முறையில் இயக்குவது, நேவிகேஷன் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் போன்ற வசதிகளை வழங்க பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

நாசாவின் திட்டத்தின் படி நோக்கியா மட்டுமின்றி பல்வேறு இதர தனியார் நிறுவனங்களும் இது போன்ற பணிகளை துவங்க இருக்கின்றது. இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here