Home செய்திகள் கொரோனா DIWALI Sale : ஒரே ஒரு வீடியோவால் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்!…

DIWALI Sale : ஒரே ஒரு வீடியோவால் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்!…

466
0
Kumaran Silks
Share

கொரோனா விதிமீறல் காரணமாக திநகரில் உள்ள குமரன் சில்க்ஸ் துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்த காரணத்தினால் மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அதே போல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல்வேறு நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வந்தன. அதில் ஜவுளிக்கடைகள் திறப்பின்போது தனிமனித இடைவெளி, கட்டாய முகக்கவசம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் கடைக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.

கொரோனா காலத்திலும் 17 நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி!.. முழு பட்டியல் இதோ!…

ஆனால் தற்போது இதையெல்லாம் மீறி சென்னை தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையில் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் குமரன் சில்க்ஸ் கடையை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக கடையில் வழிந்த கூட்டத்தை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பகிரிந்தார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வரவே கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள குறிப்பிடதக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here