Home செய்திகள் இந்தியா தமிழகத்திற்கு 335 கோடி ! ஏன் தெரியுமா ?

தமிழகத்திற்கு 335 கோடி ! ஏன் தெரியுமா ?

409
0
Share

தற்போது மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்குத் தொடர்ந்து ஆறாவது முறையாக 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு வசூல் வழியில் வரும் வருவாய் கடுமையாகக் குறைந்துள்ளது. ஏனென்றால் ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு தொழிலும் நடைபெறாத காரணத்தால் வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான். எனவே இதனைச் சமாளிக்க மத்திய அரசு 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு இந்த நிதியை தவணை முறையில் அளித்து வருகிறது.

மாயமான 5 இளைஞர்கள் ! சீனா இந்தியாவிடம் ஒப்படைக்கிறது…

இந்நிலையில் தமிழகம், கேரளா உட்பட 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 135 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவிற்கு அதிகபட்சமாக 1276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Central Government

இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது :-
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த கூடுதல் நிதி உதவும் என ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here