Home செய்திகள் இந்தியா 20 லட்சம் கோடி பொருளாதாரச் சார்ந்த திட்டங்கள் ! – அறிக்கை வெளியிடுகிறார்  நிதியமைச்சர் நிர்மலா...

20 லட்சம் கோடி பொருளாதாரச் சார்ந்த திட்டங்கள் ! – அறிக்கை வெளியிடுகிறார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

460
0
nirmala seetharaman
Share

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சரிசெய்ய  20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் வெளியிட இருப்பதாகப் பிரதமர் மோடி நேற்று மக்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதமாகும்’’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
finance minister
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான  பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்து அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் இந்த 20 லட்சம் கோடியின் கீழ் வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் நேற்று அவர் பேசியதில் இது வரை அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் இந்த திட்டத்தின் கீழ் வரும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here