Home செய்திகள் இந்தியா இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ? மோடி பரபரப்பு பேச்சு…

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ? மோடி பரபரப்பு பேச்சு…

557
0
modi
Share

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரிழப்பை மீட்டெடுக்க  ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது, இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பைச் சரி செய்ய சில  பொருளாதார சிறப்புத் திட்டங்கள் எடுக்கவுள்ளேன். ‘ஆத்மனிர்பார் பாரத் அபியான்’ என்ற பெயரில் இந்த புதிய  திட்டத்திற்கு ரூ. 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். modi
இந்தியாவின் வளர்ச்சியானது பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், மக்கள் சக்தி, உற்பத்தி தேவை, தொழில்நுட்பம் ஆகிய 5 துறைகளை அடிப்படையாகக் கொண்டது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உள்நாட்டுத் தொழில்துறை நமக்குப் பெருமளவில் உதவியுள்ளது. ஏழை எளிய மக்கள் கொரோனா பாதிப்பைத் துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் நாசத்தை விளைவித்துவிட்டது. இதுபோன்ற பாதிப்பை  நாம் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது. உலகம் முழுவதும் கோடிக்கண மக்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயிரைப் பாதுகாக்க ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் முன்பு நாம்  தோல்வியடையவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 42 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சம்பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் இறப்பு குறைவுதான் ஆனாலும் ஏராளமானோர் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையளிக்கிறது. இந்த நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் இந்தியா பாராட்டப்படுகிறது. இதனால் அனைத்து  இந்தியர்களும் பெருமைப்படுகின்றனர்.
குறிப்பு :
இதற்கு முன்பு அதாவது நேற்று நாட்டில் பொது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஊரடங்கு முடிவு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக மே 18-குள் மீண்டும் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here