Home செய்திகள் இந்தியா JIO -வில் 1 வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புதிய Recharge பிளான் !

JIO -வில் 1 வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புதிய Recharge பிளான் !

578
0
HotstarJIO
Share

Youtube -ல் வீடியோ பார்த்தால் பணக்காரர் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால் தற்போது நினைத்தால் Youtube என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் JIO தான்.
ஆம், 2016 -ல் ஒரு மாதத்திற்கு 1 GB டேட்டாவை பார்த்துப் பார்த்து செலவு செய்த நாம் ஒரு நாளைக்கு 2 GB போதவில்லை என்கிறோம். அந்த அளவிற்கு இனையப் பயன்பாடு அதிகரித்து விட்டது இதற்குக் காரணம் JIO வே.JIO
JIO நெட்ஒர்க் தொடங்கிய காலத்தில் இலவசமாகக் கொடுத்த அன்லிமிடெட் டேட்டா அனைவரின் இனையப் பயன்பாட்டை மூழ்கடித்துவிட்டது. அதேபோல் ஏராளமான திட்டங்களை விளம்பரப்படுத்தி JIO தன் வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் புதிய யுக்திகளையும் ஏராளமான ஆஃபர்களையும் அறிவிக்கிறது.
இதன் வளர்ச்சியைக் கண்டு பன்னாட்டு முதலீடுகளும் குவிந்து வருகின்றது. தற்போது மேலும் ஓர் புதிய Recharge  திட்டத்தை அறிவித்துள்ளது JIO. இந்த Recharge திட்டத்தில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
அதாவது JIO சில குறிப்பிட்ட Recharge திட்டத்திற்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கியுள்ளது. இந்த Recharge திட்டத்தை அக்டிவேட் செய்த பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அந்த JIO நம்பர் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு OTP டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருந்து வரும். அந்த OTP -யை பதிவு செய்த உடன் தங்களுக்கான 1 வருடச் சாந்த தொடங்கிவிடும்.
1 வருடச் சந்தா தான் கிடைத்து விட்டதே என்று JIO என்னை Recharge செய்யாமல் விட்டுவிடக் கூடாது. அந்த என் ஆக்டிவாக இல்லையென்றால் டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா நின்று விடும்.
அந்த திட்டங்களின் விவரம் :
1. 401 rs திட்டம் = 90 GB டேட்டா,அன்லிமிடெட் வாய்ஸ்கால், 28 நாள் வேலிடிட்டி.
2. 2599 rs திட்டம் = 1 வருட திட்டம் , தினமும் 2 GB டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ்கால்.
3. 612 rs திட்டம் = இது கூடுதல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நிமிடங்களைக் கொடுக்கும் திட்டம். 72 GB  டேட்டா, 6000 நிமிட JIO – Other நெட்வொர்க் வாய்ஸ் கால் நிமிடங்கள்.
4. 1,208 rs திட்டம் =  இதுவும் கூடுதல் டேட்டா கொடுக்கும் திட்டம் தான். 240 GB அதி வேக டேட்டா மற்றும் 240 நாள் வேலிடிட்டி.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here