Home முகப்பு முக்கிய செய்திகள் வேதியல் துறையில் புரத ஆய்வுக்காக நோபல் பரிசு

வேதியல் துறையில் புரத ஆய்வுக்காக நோபல் பரிசு

447
0
Share

3 விஞ்ஞானிகளுக்கு 2018ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது நொதி (என்சைம்) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக.

இந்த பரிசைப் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த நோபல் பரிசை வென்றவர்கள் “இயக்கப்படும் பரிணாமம்“என்கிற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க பயன்படுகின்றன.  இத்தகைய நொதிகள் புதிய மருந்துகள் மற்றும் பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

மொத்த பரிசுத் தொகையில் அர்னால்டு பாதி தொகையான 9,98,619 டாலரை பெறுகிறார். பாதியை ஸ்மித்தும், வின்டரும் சமமாகப் பகிர்ந்து கொள்வர்.

ஜார்ஜ் பி. ஸ்மித் மற்றும் கிரகோரி வின்டர் புதிய புரதங்களை பரிணமிக்க செய்ய பெஜ் காட்சி தொழிற்நுட்பத்தை உருவாக்கினர்.

குறிப்பிட்ட பாக்டீரியாவை அழியச் செய்து புதிய ஆன்டிபாயடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தினர்.

இவ்வாறு தீங்கான பாக்டீரியாக்களை மற்றும் வைரஸ்களை சமநிலைப்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பால் பயன்படுத்தப்படும் பெரிய புரதங்களாக இந்த ஆன்டிபாயடிகள் செயல்பட்டன.

2002ம் ஆண்டு இந்த பெஜ் காட்சி தொழிற்நுட்பப்படி உருவாக்கப்பட்ட முதலாவது ஆன்படியான ‘அடலிமுமாப்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது தடிப்பு தோல் அழற்சி. முடக்கு வாதம், குடல் அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டது.

பெஜ் காட்சி தொழில்நுட்பம் நச்சுத்தன்மை, நோய் தடுப்பு திறனை அதிகரித்தல், பிற இடங்களில் பரவும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிபாயடிகளை உருவாக்கியுள்ளது.

வேதியலுக்கான நோபல் பரிசு பெறுகின்ற பிரான்சஸ் அர்னாடு 5வது பெண்ணாவார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here