Home முகப்பு முக்கிய செய்திகள் இறுதி எச்சரிக்கை.. பருவநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள்

இறுதி எச்சரிக்கை.. பருவநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள்

346
0
Share

புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆய்வாளர்கள் இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள். 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி புவி வெப்ப அதிகரிப்பு செல்வதாக கூறுகிறார்கள்.

பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் இப்போதுள்ள சூழ்நிலை தொடரக்கூடாது. இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

1.5 செல்சியஸ் வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென மூன்றாண்டு ஆய்வுக்குப் பின் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC) விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தென்கொரியாவில் நடந்தது. இதற்குப் பின் ஒரு சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் அறிவியலாளர்கள் பருவநிலை குறித்த தங்கள் ஆய்வை முன்வைத்து பேசினர், அரசு பிரதிநிதிகள் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை முன்வைத்து தங்கள் தரப்பை விளக்கினர். பொருளாதாரத்துக்காக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தவிர்க்க முடியாத சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் இணை தலைவர் பேராசிரியர் ஜிம் ஸ்கே. “புவி வெப்ப அதிகரிப்பை 2 செல்சியஸாக குறைப்பதற்கு பதிலாக 1.5 செல்சியஸில் நிறுத்துவது பல நல்ல பலன்களை தருகிறது” என்கிறார் 1.5 செல்சியஸாக நாம் வெப்பத்தை குறைக்க, நாம் நிலத்தை நிர்வகிப்பதில், எரிசக்தி பயன்பாட்டில் மற்றும் போக்குவரத்தில் நாம் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்கிறார் ஜிம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here