Home கட்டுரை விஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

விஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

520
0
lokeshkanagaraj
Share

விஜய் அண்ணா என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிஎன்று கூறி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

lokeshkanagaraj

நடிகர் விஜய் பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று அறிவித்தது.மேலும் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடைசி படப்பிடிப்பு நாளன்று விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர்.

தற்போது படத்தின் டப்பிங் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் மாஸ்டர் படத்தின் இயக்குநர் ஆன லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார் அந்த டீவீட்டில் கூறியிருப்பதாவது :

மாஸ்டர் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது.இதில் இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து 129 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.இந்த 129 நாட்கள் வேலை செய்தது என் நெஞ்சில் மிக நெருக்கமாகிவிட்டது.என் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி விஜய் அண்ணா….

 

lokeshtweet

என் குழு இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது.உங்களை நினைத்து பெருமையாக உள்ளது பாய்ஸ் எனக் கூறியுள்ளார்.

ஆச்சரியமூட்டும் அளவில் சாதனை படைத்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் வசூல்…

இந்த டீவீட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்கள் அண்ணா என்று தெரிவித்ததோடு அவரிடம் இசை வெளியீட்டு விழா எங்கே நடக்கவுள்ளது,என்று நடக்கவுள்ளது என்று சரமாரியான கேட்டதோடு,இந்த கோடை நம்மளுடையது மாஸ் பண்றோம் ப்ரோ என்று பதிவிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் அவரே பாடியுள்ள ஒரு குட்டி ஸ்டோரி பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.வரிகள் உள்ள வீடியோவே இந்த அளவுக்குப் பிரபலமாகி உள்ளது என்றால் இன்னும் திரையில் எப்படி இருக்கும் என்ற ஆவலுடன் விஜய் ரசிகர்கள் உள்ளனர். மாஸ்டர் படத்தில் விஜய்,விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையேயும்,ரசிகர்களிடையேயும் மிகுந்த வண்ணம் உள்ளது.

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here