Home செய்திகள் இந்தியா அஜித் நடித்த படத்தினை ரீமேக் செய்த தெலுங்கு நடிகர் ? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் !…

அஜித் நடித்த படத்தினை ரீமேக் செய்த தெலுங்கு நடிகர் ? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் !…

507
0
police-sap
Share

police-sap

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் படமான பிங்க் படத்தைத் தெலுங்கு மொழியில் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் பவன் கல்யாண், அஜித் நடித்த வேடத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியது. இந்த படத்திற்கு வக்கீல்-சாப் என்று பெயரிட்டுள்ளனர்.

பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தவர்கள் இந்த தெலுங்கு ரீமேக் படம் எப்படி இருக்கும் என்று காண ஆவலுடன் காத்துத்திருக்கின்றனர்.நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவருக்கும் நினைவு இருக்கிறதா?
பிங்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் இருந்தது.வெறும் அஜித் முகம் மட்டும் மாற்றி இருந்தது.தற்போது இரண்டு படங்களின் போஸ்டர்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

ஒரு வருடத்திற்குப் பிறகு பவன் கல்யாண் படம் வெளிவருகிறது.இதனால் அவரை திரையில் காண்பதற்கு அவரது ரசிகர்கள் மிகவும் அவளாகக் காத்திருக்கின்றனர். தமிழ் ரீமேக்ல் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு ரீமேக்ல் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தில் ராஜு மற்றும் போனி கபூர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பிங்க் படம் இந்தி மற்றும் தமிழில் இந்த படம் ஹிட் ஆனது போல் தெலுங்கிலும் மாஸாக இருக்கும். கண்டிப்பாக ஹிட்டாகும் எனப் பவன் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதேபோல் 2017ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம் படத்தை கட்டமராயுடு எனும் பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர்.இதிலும் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு த்ரீவிக்ரம் இயக்கத்தில் அஞ்ஞாதவாசி என்ற படத்தில் நடித்திருந்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here