Home செய்திகள் இந்தியா மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

829
0
RajinikanthonDiscovery
Share

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டமேன் வெர்சஸ் வைல்டுநிகழ்ச்சியில் தற்போது “சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த்” அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.man vs wild rajinikanth

மேன் வெர்சஸ் வைல்டுஎன்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரேசில், இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சித் தொடராகும். இந்த நிகழ்ச்சி இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் சில பகுதிகளில் பார்ன் சர்வைவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி முதலில் சேனல் 4 ஆல் ஒளிபரப்பப்பட்டது, ஆனால் பின்னர் இங்கிலாந்தில் உள்ள டிஸ்காவிரி சேனலுக்கு மாற்றப்பட்டது.

rajinikanth with bear gryllsமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியைச் சாகச வீரர் மற்றும் தொகுப்பாளரான பேர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.  பேர் கிரில்ஸ் காடுகளில் ஒருவர்த் தனியாக மாட்டிக் கொண்டால் எவ்வாறு தப்பி வருவது என்றும், இயற்கையோடு உயிர்வாழத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் உணவு சேகரிக்கும் முறைகள் குறித்தும் கற்றுத்தருவார்.

man vs wild rajinikanth

இந்த ஒரு பிரபல நிகழ்ச்சியில் தற்போது இந்திய சூப்பர் ஸ்டாரான தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்றுள்ளார். அதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் வனப் பகுதியில் நடந்துள்ளது. இதை அறிந்த “தலைவர் ரஜினி”  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #ThalaivaOnDiscovery என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியைக் காண ரஜினியின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே மிகுந்த ஆவலாக உள்ளனர்.man vs wild tamilஇதற்கு முன்” மேன் வெர்சஸ் வைல்டு” நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்களும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகவும் ட்ரெண்டாகவும் ஆனது.

அந்த வரிசையில் தற்போது “தலைவர் ரஜினியும்” இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here