Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் – இரண்டு திட்டங்கள் அறிவிப்பு.!

மதுரையில் ஆக்ட் ஃபைபர்நெட் சேவை துவக்கம் – இரண்டு திட்டங்கள் அறிவிப்பு.!

440
0
Share

ஆக்ட் ஃபைபர்நெட் சேவைகள் மதுரையில் துவங்கப்பட்டுள்ளது. ஆக்ட் ஃபைபர்நெட் ரீடெயில் மற்றும் எஸ்.ஓ.ஹெச்.ஓ. (அதாவது சிறிய அலுவலகம், வீட்டு அலுவலகம்) வாடிக்கையாளர்களுக்கான பிராட்பேன்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரீடெயில் சலுகையின் படி இரண்டு பிராட்பேன்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆக்ட் சில்வர் திட்டத்தில் 150 ஜிபி டேட்டா 50 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வழங்கப்படுகிறது, இதற்கான கட்டணம் ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ட் கோல்டு திட்டத்தில் 300 ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ,799 விலையில் வழங்கப்படுகிறது.

எஸ்.ஓ.ஹெச்.ஓ. திட்டத்தில் 600 ஜிபி டேட்டா 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ.1499 விலையில் வழங்கப்படுகிறது. ஆக்ட் எஸ்.ஓ.ஹெச்.ஓ. இன்கிரெடிபிள் 1000 ஜிபி டேட்டா 150 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ரூ.1,999 விலையில் வழங்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here