Home செய்திகள் இந்தியா தமிழ்நாட்டிற்குள் புகுந்த கொரோனா? கைக்குழந்தை உட்பட நான்கு பேர் கொரோனா வார்டில் அனுமதி! இந்தியா...

தமிழ்நாட்டிற்குள் புகுந்த கொரோனா? கைக்குழந்தை உட்பட நான்கு பேர் கொரோனா வார்டில் அனுமதி! இந்தியா முழுவதும் 29 பேருக்குப் பரவியுள்ளது…

398
0
Share

தமிழ்நாட்டில் 4 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கைக்குழந்தை இருப்பது மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளது.

திருச்சி ஆரம்ப சுகாதார நிலையம்

சீன நாட்டின் வவுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா  (கோவிட் – 19) இப்போது உலகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவிவருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 29 பேர் இந்த வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த நோய்க் கிருமியினால் இதுவரை உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஆனால் இதுவரையில் இந்த நோய்க்கு எந்த நாட்டிலும் மருந்து கண்டுபிடி வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் உலகின் ஏதோ ஒரு பகுதியில் அதன் தாக்கத்தைத் தொடங்கி இப்போது உலகம் முழுக்க அதனால்  உயிர்ப் பலியாகியுள்ளனர்.

இது வரையில் இந்தியாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இத்தாலி நாட்டிலிருந்து வந்துள்ளவர்களில் மட்டும் 16 பேர் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் இந்தியாவிற்கு வந்துள்ள அனைத்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இதுவரை 6 பேருக்கு ஒரே குடும்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 21 பேருடன் இதுவரை இந்தியாவில் மட்டும் 29 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வந்துள்ளது.மேலும் தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்கள் முழு கண்காணிப்பில் உள்ளன.

இதில் துபாய், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களைக்  கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டறிந்த போது திருச்சி விமான நிலையத்தில் கைக்குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் ஒருவருக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விசாரித்ததில் அவர் ஜப்பான் நாட்டிலிருந்து வந்துள்ளதாகவும் ஆராய்ச்சி படிப்பிற்காகச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து காய்ச்சல் சரியாகாமலிருந்தால் அரசு மருத்துவமனையை அணுகும்படி மக்களிடம் தமிழக அரசு அறிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here