Home செய்திகள் இந்தியா கொரோனா யுத்தம் வெற்றி வாகை சூடியவர்கள்

கொரோனா யுத்தம் வெற்றி வாகை சூடியவர்கள்

457
0
india map
Share

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகளவில் குணமடைந்திருக்கும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தை வகிக்கிறது.

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4374 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 329 பேர் குணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 பேரும், தமிழகத்தில் 571 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 64 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இந்நிலையில் மாநில வாரியாக கொரோனா நோயாளிகள் குணமடைந்தது பற்றிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.India

ஏப்ரல் 5. காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக விகிதத்தில் குணமடைந்திருக்கும் மாநிலங்களின்  பட்டியலில்  கேரளா தான் முதலிடம் வகிக்கிறது. ஜனவரி 30 முதல் இதுவரை 314 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதில், கிட்டத்தட்ட 17 சதவீதம் பேர் குணமாகியுள்ளனர். மேலும், இதுவரை இறப்பு எண்ணிக்கை 2 பேர் மட்டுமே. இதற்கு அடுத்தடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா 5.5 சதவீதமும் (35 பேர்), டில்லி 4.04 சதவீதமும் (18 பேர்) குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை விரைவாக பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதுவே  குணமடைந்தவர்களின் விகிதத்தில் கேரளா முன்னிலை வகிக்க  காரணம் என கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here