Home அறிவியல் கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்-உலகின் அதிநவீன சாதனை!

கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்-உலகின் அதிநவீன சாதனை!

745
0
Share

கணினி அறிவியல் தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத அளவிற்கு, அதிவேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகை வியப்பில்ஆழ்த்தியிருக்கிறது.

இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கமுடியாத ஒரு கணக்கின் விடையை இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் 3 நிமிடங்கள் 20 விநாடிகளில் கண்டுபிடித்துவிடும் என்று சொல்லப்படுவதிலிருந்தே இதன் ஆற்றலை உணரமுடிகிறது.

இந்த ஆற்றலைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில்  குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயந்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ் பெற்றுவரும் மலர் மருத்துவம் | மருத்துவத் துறையில் புதிய சாதனை!

அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1903-ல் விமானத்தைக் கண்டுபிடித்த சாதனைக்கு ஈடானது இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பின் சாதனை. இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் துறையில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஆய்வுகளின் விளைவுதான் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்.  “குவாண்டம் மெகானிக்ஸ் துறையின் வழக்கத்துக்கு மாறான ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய கம்ப்யூட்டர்களை உருவாக்கியிருக்கிறோம்” என்று கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்புக்குத் தேவைப்பட்ட வன்பொருளை (ஹார்ட்வேர்) உருவாக்கித் தந்த ஜான் மார்ட்டினிஸ் தெரிவிக்கிறார்.

ஆயினும் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் ஆய்வகத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லை.  குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்பில்  மைக்ரோ சாஃப்ட், இன்டெல், ஐபிஎம், கூகுள் ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக முயன்றுவரும் வேளையில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து கூகுள் முதலாவதாக சாதனை புரிந்திருக்கிறது.

ஒரு பக்கம் தனித்தனித் தொழில் முனைவோர் குவாண்டம் கம்ப்யூட்டரைத் தயாரிப்பதற்காக 45 கோடி டாலர்களை ஸ்டார்ட்-அப் என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். மற்றொரு பக்கம் தேசிய குவாண்டம் ஆய்வகம் நிறுவ சீனா 45 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், குவாண்டம் கம்ப்யூட்டரை நிறுவ தேசிய அளவில் எடுக்கும் முயற்சிக்கு 102 கோடி டாலர்களை ஆய்வுக்காக வழங்கியிருக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here