Home செய்திகள் இந்தியா உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்து

உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்து

353
0
Share

‘மோனோ சோடியம் குளுட்டமேட்’ எனும் வேதிப் பொருள் அஜினமோட்டோ என்று அழைக்கப் படுகிறது.  இது உணவுக்குச் சுவை கூட்டும் ஒரு வேதி உப்பு ஆகும்.

இன்று நாம் ஹோட்டல்களில் உண்ணும் நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட சிக்கன் வகைகள், சூப் வகைகள், பிரியாணி வகைகள், ஸ்பிரிங் ரோல்கள், பல வண்ண சாஸ்கள் போன்றவை மட்டுமல்லாது பல வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.

இது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  ஒவ்வாமை, பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி,ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினை, செரிமானப் பிரச்சினை, தூக்கமின்மை, நெஞ்சுவலி, அல்சர், மூலநோய், குழந்தைப்பேறின்மை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, குடல் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய்,நரம்புத்தளர்ச்சி, விரல் நடுக்கம், உடல் மதமதப்பு, குமட்டல், வாந்தி,  படபடப்பு, கைகள் மரத்துப்போதல் போன்ற நோய்கள் இதன் காரணமாக வருகிறது.

ஆகவே அஜினமோட்டோவைத் தவிர்த்த உணவுகளே உடல்நலத்திற்கு நல்லது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here