Home செய்திகள் இந்தியா Yes Bank திவாலா? ஆர்பிஐ -ன் அதிரடி முடிவு…..

Yes Bank திவாலா? ஆர்பிஐ -ன் அதிரடி முடிவு…..

578
0
RBI and YESBank
Share

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான Yes Bank தற்போது வாராக்கடனால் தத்தளிப்பு. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் பரிதவிப்பு. கடும்  நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Yes Bank

ஏறக்குறைய 30 லட்சத்திற்கும் அதிகமான  வாடிக்கையாளர்களைக் கொண்ட Yes Bank-ல் சுமார் 3 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனால் ரிசெர்வ் வங்கியிடம்   அடைமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

16 வருடத்திற்கு முன்பு ராணா கபூர் மற்றும் அசோக் கபூர் ஆகிய இருவரால் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த Yes Bank. ஆரம்பத்தில் அனைத்து வாடிக்கையாளர்கள் மனதிலும்  இடம் பிடித்த இந்த யெஸ் வங்கி நாடு முழுவதும் தனது கிளைகளைப் பரப்பிச் சிறப்பான சேவையை வழங்கிவந்தது. 2019 ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் 1122 கிளைகளும் 1220 ஏடிஅம் மையங்களும் இருந்தன.

Yes Bank Branch

வாடிக்கையாளர்கள் அதிகம் குவிந்ததால் கடன்களையும் வாரி வழங்கின.வங்கியை விரிவு படுத்த தைவான் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள 8 மிகப்பெரிய சர்வதேச வங்கிகளிலிருந்து 3000 கோடி ரூபாயை சின்டிகேட் கடனாக  வாங்கியது. இதனால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.தற்போது இந்த வங்கியின் நிலை மோசமாக இருந்தாலும் 2011-ஆம் ஆண்டு இந்தியாவின் வேகமாக வளரும் வங்கி என்ற விருதைப் பெற்றது. டிஜிட்டல் வங்கிக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

YesbankBhimவோடபோன்,ஜெட் ஏர்வேஸ்,ஐஎல்எப்எஸ் போன்ற நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கில் கடனை வாரிக் கொடுத்ததேஇந்த நிலைமைக்குக் காரணம்.கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்து இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

YesBank Chartஇந்த வங்கிகளின் பங்குகள் 2018-இல் 400 ரூபாயைத் தாண்டி இருந்தது. ஆனால் படிப்படியாகச் சரிந்து மிக  அதலபாதாளத்திற்குத்  தள்ளப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 5 ரூபாயைத் தொட்டுச்சென்றது.

RBI இந்த நிலையைக் கண்டு ரிசெர்வ் வங்கி இந்த வங்கியின் நிர்வாகம் முழுவதும் 1 மாதத்திற்கு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்தது.இதைத் தொடர்ந்து கடந்த 5.3.2020-ல்  யெஸ் வங்கியின் 49% பங்கினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி -யை வாங்க அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

SBI and LIC

இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் யெஸ் வங்கி      வாடிக்கையாளர்கள் இந்த 1 மாதத்திற்கு 50000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். ஏதாவது அவசர தேவை என்றால் அதற்கான சரியான ஆவணங்களை வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்து 5 லட்சம்  வரை  பெற்றுக்கொள்ளலாம் என ரிசெர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here