Home செய்திகள் இந்தியா ஆண்ட்ராய்டு os 11 செப்டம்பரில் வெளியிடா ?

ஆண்ட்ராய்டு os 11 செப்டம்பரில் வெளியிடா ?

319
0
android 11
Share

உலகெங்கும் ஆன்டிராய்டு os தளம் கொண்ட ஸ்மார்ட்போன்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை Google நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து ஸ்மார்ட்போன் சாதனங்களிலும் செயல்முறையில் உள்ளது. இதனை மேம்படுத்தும் அடுத்த வெர்சன் ஆண்ட்ராய்ட் 11 os செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளிவர இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

தற்போது Google நிறுவனத்திடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 செப்டம்பர் 8ல் வெளிவர வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி தான் ஆண்ட்ராய்டு os 10 இயங்குதளம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ல் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவியது.

ஆனால் இதற்கு Google நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் வெளிவரும் தேதி குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here