Home டெக்னாலஜிஸ் இனிமே சீன போன்கள் எதுக்கு? அட்டகாசமான மோட்டோரோலாவின் ஸ்மார்ட்போன்களே போதும்!…

இனிமே சீன போன்கள் எதுக்கு? அட்டகாசமான மோட்டோரோலாவின் ஸ்மார்ட்போன்களே போதும்!…

391
0
Motorola One Vision Plus announced with 48MP quad camera
Share

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மோட்டோரோலா கடந்த சில வாரங்களில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை களமிறக்கியுள்ளது, அந்த வகையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 1.8GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக சேமிப்பிடத்தை 512 ஜிபி வரை மேலும் விரிவாக்க முடியும்.

கேமராவை பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஒரு குவாட்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா (எஃப் / 1.7) + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் (எஃப் / 2.2) + 16 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.2) மூன்றாம் நிலை கேமரா + 117 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட ஒரு பிரத்யேக அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில், எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஆண்ட்ராய்டு 9.0 பை இல் இயங்குகிறது, மேலும் இது 4000 mAh பேட்டரி மூலம் 15W டர்போ சார்ஜிங்கையும் ஏற்கிறது. இணைப்பு முன்னணியில், நீங்கள் 4 ஜி VoLTE, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் இரட்டை சிம் கொண்டிருக்கிறது. தொலைபேசி 158.35 x 75.83 x 9.09 மிமீ அளவினையும் மற்றும் 188 கிராம் எடையையும் கொண்டிருக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here