Home செய்திகள் காய்கறிகள் காம்போ ! வீட்டிற்கே டோர் டெலிவெரி ….

காய்கறிகள் காம்போ ! வீட்டிற்கே டோர் டெலிவெரி ….

725
0
swiggy
Share

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயம்பேடு விலைக்கே காய்கறிகள் டோர் டெலிவரி செய்ய zomato, swiggy போன்ற இணையதள டெலிவரி நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. தமிழக அரசு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.vegetables

ஊரடங்கு தடை காரணத்தினால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  கோயம்பேடு மார்க்கெட்டிற்க்கு காய்கறிகள்  மிக அதிகமாக வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் ஒரே இடத்தில் கூட்டமாக கூட கூடாது என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது, அன்றாட உணவுக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் வாங்க தினந்தோறும் பொதுமக்கள் காய்கறி மார்க்கெட்டிற்கு  அல்லது சந்தைக்கு செல்கின்றனர்.

இதனால் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, இப்போது பொது மக்களுக்கு வீட்டிற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் பணியை கோயம்பேடு மார்க்கெட் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே ஆன்லைன் டோர் டெலிவரி நிறுவனங்களான Zomato, swiggy போன்ற இணையதளங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. இதற்காக சிறப்பான combo packகள்  அறிமுகப்படுத்தியுள்ளனர்.swiggy

காய்கறிகள் கொண்ட pack-ல் உள்ள விவரம் பெரிய வெங்காயம் – 1 kg, மாங்காய் – 1 முருங்கைக்காய் – 2 வாழைக்காய் – 2 தக்காளி – 1/2 kg, உருளைக்கிழங்கு – 1/2 kg கிலோ கத்திரிக்காய் – 1/2 kg கிலோ பீன்ஸ் – 1/2 kg கிலோ முள்ளங்கி – 1/2 kg கேரட் – 1/2 kg சேனைக்கிழங்கு – 1/2 kg அவரைக்காய் – 1/2 kg குடமிளகாய் – 1/2 kg பச்சைமிளகாய் – 100 g  எலுமிச்சை – 5 இஞ்சி – 100 g  மல்லி – 1கட்டு புதினா – 1கட்டு.Chennai market

இந்த combo pack-ன் விலை ரூ.220 என விற்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வீட்டிலேயே இருக்குமாறு கோயம்பேடு காய்கறிகள் மற்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here