Home செய்திகள் இந்தியா JEE, NEET தேர்வு நடத்துவதில் சிக்கல் ! நெருக்கடியில் மாணவர்கள்…

JEE, NEET தேர்வு நடத்துவதில் சிக்கல் ! நெருக்கடியில் மாணவர்கள்…

355
0
Neet
Share

கொரோனா பரவல் காரணமாக JEE, NEET போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்துவதில் புது சிக்கல். தேர்வுகள் நடத்தும் தேதி மாற்றம் உண்டா என்று மாணவர்களிடமும்,  பெற்றோர்களிடமும் கேள்வி எழும்பியுள்ளது.
இது தொடர்பாக விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதே போல் இதற்கு முன்பு இழுபறியிலிருந்த CBSE 10ம், 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து CBSE மாணவர்களுக்கான 10ஆம் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில  கல்லூரிகளில் இன்ஜினியரிங் மேற்படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும்   JEE, நுழைவுத் தேர்வை ஜூலை 18 – 23ம் தேதிகளில் நடத்தப்படும் என்று N.T.A எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஜூலை 26ல் மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவுத் தேர்வும்.நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரம் அடைவதால் மாணவர்களும், பெற்றோர்களும் இந்த நுழைவுத் தேர்வுகளை  ஒத்தி வைக்குமாறு சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால் தேர்வு தேதியை மாற்றலாமா வேண்டாமா என்று மத்திய அரசு பெரும்   குழப்பத்தில் உள்ளது.ஆனால் இது தொடர்பாக இன்னும் முடிவு ஏதும் வெளியாகவில்லை.
மாணவர்கள் தேர்வு தேதி தள்ளி வைக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஆசிரியர்கள் தகுதித் தேர்விற்கு நடத்தப்படும் CTET எனப்படும் தேர்வு ஜூலை 5-ல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here