Home முகப்பு உலக செய்திகள் கொரோனாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடியதாக பிறழ்வு வைரஸ்?.. மலேசியாவில் பாதிப்பை...

கொரோனாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடியதாக பிறழ்வு வைரஸ்?.. மலேசியாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!…

371
0
Corona Virus
Share

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றை விட, 10 மடங்கு அதிகமாக பரவக் கூடிய பிறழ்வு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சமீபத்தில், மலேசியா சென்ற உணவக உரிமையாளர் ஒருவருக்கு, பிறழ்வுடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என, சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில், அவருக்கு புதிய ‘D614ஜி’ எனப்படும் பிறழ்வு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, கொரோனாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடியதாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மலேசிய சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தள்ளதாவது:

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியது!!..

மலேசியாவில் தற்போது பதிவாகும் 45 கொரோனா பாதிப்புகளில் குறைந்தது மூன்று பாதிப்புகள் பிறழ்வு கொரோனா பாதிப்புகளாக உள்ளன. குறிப்பாக, இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து திரும்பும் மக்களிடம் இது போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ், தடுப்பூசிகளைப் பற்றிய தற்போதைய ஆய்வுகள் முழுமையற்றதாகவோ அல்லது பிறழ்வுக்கு எதிராக பயனற்றதாகவோ இருக்கலாம்.

மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பிறழ்வு வைரஸ் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி அமலில் உள்ளது. அதை மீறும் நபருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

‘மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ள, கொரோனா வைரசின் புதிய ‘D614ஜி’ எனப்படும் பிறழ்வு வைரஸ் பாதிப்பு, கொரோனாவுக்கான தடுப்பூசிகளைப் பற்றிய தற்போதைய ஆய்வுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது’ என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here