Home செய்திகள் இந்தியா சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு 5 கோடி வழங்கியுள்ளார்.. கொரோனா நிதி !

சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு 5 கோடி வழங்கியுள்ளார்.. கொரோனா நிதி !

490
0
sundar pichai
Share

இந்தியாவிற்கு  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு தரப்பில்  இருந்தும், அமைப்புகளில் இருந்தும்  நிதியுதவி அளிக்கின்றனர். இதில் இந்தியாவுக்காக கொரோனா நிவாரண நிதியாகக் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை 5 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

சீன நாட்டின் ஊஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது பெரும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள்  இந்திய அரசுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.Give india

தற்போது  கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, ‘இந்தியாவிற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். GIVE INDIA என்ற தன்னார்வ அமைப்பு, நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாதையாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பிற்கு  தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி வழங்கியுள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா 144 நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது.

இந்த சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் நாடு  இவர் உயர் படிப்பு மட்டும் வெளிமாநிலத்தில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here