Home செய்திகள் இந்தியா 30 வினாடியில் கரையும் சோப்! பிரிட்டன் நிறுவனம் புது முயற்சி… 

30 வினாடியில் கரையும் சோப்! பிரிட்டன் நிறுவனம் புது முயற்சி… 

367
0
soap
Share

கொரோனா வைரஸ் ஆரம்பக் காலத்திலிருந்தே கை கழுவுதல் குறித்து விழிப்புணர்ச்சியை உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி கை கழுவுதல் குறித்து அனைவரும் கேள்வி பட்டுவந்தனர்.
தண்ணீர், சோப், 30 வினாடிகள் இந்த மூன்றும் முக்கிய அம்சமாகக் கருதுகின்றனர். இதையே தான் கொரோனாவில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் ஆயுதம் என்று உலக சுகாதார மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
handwashஅப்படி இருக்க ஒரு சிறிய ஆய்வறிக்கையில் அடிக்கடி கை கழுவுவதால் அனைவரும் ஐந்து வினாடிகளுக்கு கைகளைக் கழுவி விடுவதாகக் கூறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு கைகள் 30 வினாடிகள் வரை நன்கு தேய்த்துக் கழுவினால் சோப் மறைந்துவிடும் என்று பிரிட்டன் சேர்ந்த இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லஷ் ஒரு புதிய சோப்பை தயாரித்துள்ளது.
இந்த சோப் கொண்டு கை கழுவினால் 30 வினாடிகளில்  சோப் மறைந்து விடுமாம். இதற்கு 30secondsoap.com என்ற தளத்தில் வந்து ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி இலவசம் என்ற விளம்பரம் செய்து வருகிறது.
இந்த சோப் உலக சுகாதார அமைப்பு கூறியபடி 30 வினாடிகள் கடைப்பிடிக்கப்படும் என்பதால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த புதிய 30secondssoap-ற்கு ஆர்டர்கள் குவிந்தவண்ணம் இருப்பதால் லஷ் நிறுவனத்திற்கு தற்போது நல்ல வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here