Home செய்திகள் இந்தியா 2-வது முறை தலா 1000… ரூ.83.99 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு...

2-வது முறை தலா 1000… ரூ.83.99 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு !

511
0
EPS
Share

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 49 நாட்கள் கடந்துள்ள நிலையில்,மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நேற்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கின்றனர். அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களாக வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள், பனை மர தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் என 15 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 15 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13 லட்சத்து 1277 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1000 வழங்க தமிழக அரசு 130 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 15 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் 2-வது முறையாக வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.83.99 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால், மீனவர்கள், பழங்குடியினர் , திருநங்கைகள், சினிமாத்துறையினர் என 15 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here