Home செய்திகள் இந்தியா SBI வாடிக்கையாளர்கள் இனி மேல் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது !...

SBI வாடிக்கையாளர்கள் இனி மேல் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது ! SBI -இன் புதிய கிடுக்கிப்பிடி…

311
0
Share

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இனி மேல் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் OTP நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஒவ்வொரு முறையும் 10ஆயிரத்திற்கு மேல் பணம் ஏடிஎம் வாயிலாக எடுக்க முயன்றால் அதற்கு OTP சரிபார்ப்பு என்ற ஒரு புதிய நடைமுறை வரும் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் என்னும் அவசியம் வாடிக்கையாளர்கள் 10ஆயிரத்திற்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சிக்கும் போது வங்கி தரப்பிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பதற்காகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று SBI தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது – சக்திகாந்த தாஸ்

இந்த நடைமுறையை ஏற்கனவே ஜனவரி மாதத்தில் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் எடுப்பவர்களுக்குத் தான் OTP நடைமுறை அமலிலிருந்தது. தற்போது அனைத்து குற்றங்களும் குறைந்தது. எனவே இதனை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர வரும் 18ம் தேதி முதல் அனைத்து SBI ஏடிஎம் களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது அதேபோல் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இந்த நடைமுறை செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here