Home செய்திகள் இந்தியா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் சரிந்த பெட்ரோல் விற்பனை…

ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் சரிந்த பெட்ரோல் விற்பனை…

523
0
Petrol,Diesel Chennai
Share

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுவதால், சென்ற மார்ச் மாதம் முதல் எரிபொருள் பயன்பாடு 18 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பரவுதலைக் கட்டுப்படுத்த நாடு  முழுவதும் சென்ற மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கினை மேலும் நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கால் நாடு முழுவதும் வாகனங்கள் இயக்கவில்லை  பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளதால், எரிபொருள் உபயோகிப்பது பெரியளவில் குறைந்துள்ளது.

petrolடீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்)  தேவை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தியாவின் பெட்ரோலிய தயாரிப்பு பயன்பாடு சென்ற மார்ச் மாதத்தில் 17.79 சதவீதம் குறைந்து 16.08 மில்லியன் டன்னாக இருப்பதாக இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியாவில் அதிகமான   தேவை கொண்ட டீசல் இப்போது 24.23 சதவீதம் குறைந்து 5.56 மில்லியன் டன் அளவிற்க்குக் சரிந்துள்ளது. நாட்டில் எப்போதுமே இல்லாத அளவிற்கு எரிபொருள் பயன்பாடு சரிவடைந்ததற்கு ஊரடங்கே  முக்கிய காரணமாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here