Home செய்திகள் இந்தியா கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து paytm நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து paytm நீக்கம்!

434
0
Share

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலியைக் கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. ஆனால் IOS தளத்தில் paytm பயன்பாடு இருந்து கொண்டே தான் உள்ளது.

paytm பணம் பரிமாற்றம் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ஏனென்றால் இச்செயலி கூகுள் பிளே ஸ்டோர் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. paytm வாயிலாக ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதால் நீக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனம் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரப்படும் மேலும் தங்கள் பணம் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளது என்பதை ட்வீட்டை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.

நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம் அல்லது பந்தயம் அளிக்கும் சிறிய கட்டுப்பாடற்ற முறைகளையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எனவே தான் paytm செயலியை நாங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கினோம் எனினும் தனது வலைப்பதிவு படைக்கத் தெரிவித்துள்ளது. இதுவே நாங்கள் paytm செயலியை நீக்கியதற்கான முழு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here