Home செய்திகள் இந்தியா 30% முதல் 50% வரை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த Reliance நிறுவனம் !

30% முதல் 50% வரை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த Reliance நிறுவனம் !

459
0
Share

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அணைத்து துறைகளிலும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.
இதனால், Reliance இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஹைட்ரோகார்பன் பிரிவின் கீழ் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு 10% வரை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.
Reliance நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவரது முழு சம்பளத்தையும் கைவிடுவதாக Reliance இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஹிதால் மேஸ்வானி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Reliance PetroliumReliance இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன்  பிரிவில் ஒரு வருடத்திற்கு ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும்  ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைவான சம்பளம் பெறும் ஊழியர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில், சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பெட்ரோகெமிக்கல்களுக்கு தேவை பெருமளவு  சரிந்ததால் ஹைட்ரோகார்பன் தொழில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஹைட்ரோகார்பன் பிரிவில் நிறையத் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அணைத்து வகையிலும் செலவுகளைக் குறைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது” என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் போனஸ் தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார மற்றும் தொழிலைக் கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும், வருவாயை மேம்படுத்தத் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here