Home செய்திகள் இந்தியா பிளேஸ் ஸ்டோரில்  பணத்தைத் திரும்பப் பெற முடியும்…

பிளேஸ் ஸ்டோரில்  பணத்தைத் திரும்பப் பெற முடியும்…

396
0
google play
Share

நம் அன்றாட வாழ்க்கையில் ஆண்ட்ராய்டு போன் உபயோகம் முக்கிய ஒன்றாகி விட்டது. இதில் பிலேஸ்டாரில் ஏராளமான ஆப்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்கிறோம்.
இருப்பினும் நாம் ஒரு சில ஆப்களை கட்டணம் செலுத்திப் பெறுகிறோம். அத்தகைய தங்கள் விருப்பத்திற்கு மாறாகப் பதிவிறக்கம் செய்து இருந்தாலும் அல்லது தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யாதவாறு இருந்தாலும் அதற்குச் செலுத்திய பணத்தை நம்மால் திரும்பப் பெற முடியும்.
ஆம், அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் பிரச்சனையை தாங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த 15 நிமிடத்திற்குள் தங்கள் பணம் திருப்பி கொடுக்கப்படும். ஒரு சில நேரங்களில் இது 4 நாட்களும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பணம் கொடுத்து வாங்கும் ஆப்கள் கூட ஒரு சாம்பிள் உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here