Home செய்திகள் இந்தியா இதைப் படியுங்கள் எளிதில் தொழில் தொடங்க வாழ்வில் வெற்றி பெற…

இதைப் படியுங்கள் எளிதில் தொழில் தொடங்க வாழ்வில் வெற்றி பெற…

555
0
get success in life to start a career
Share

1.தொழில் தொடங்க பணம் வேண்டும். வெறும் கையில் முழம் போட முடியாது. ஆனால் பணம் படைத்தவர்கள் தொழில் செய்து வெற்றி பெற்றுள்ளார்களா? இல்லையெனில் காரணம் என்ன?

அதிர்ஷ்டம் இல்லை.
உழைப்பு இல்லை.
முடிவெடுக்கும் திறமை இல்லை.
நிர்வாகத் திறமை இல்லை.
சூழலைப் புரிந்து செயல்படும் தன்மை இல்லை.
அனுசரிக்கும் குணமில்லை.
சுய ஒழுக்கம் இல்லை.
தொலை நோக்கு பார்வையில்லை.
ஜாதக கட்டம் சரியில்லை.

2. நான் ஏன் தொழில் செய்ய ஆசைப்படுகின்றேன்?

அதிகமாகப் பணம் வேண்டும்.
அதிகமாகப் புகழ் வேண்டும்.
என்னிடம் பலர் வேலை செய்ய வேண்டும்.
நான் அடிமை வாழ்க்கையை விரும்பவில்லை.
என் வாழ்க்கையில் என்னிடமுள்ள முழுத் திறமையைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
தொழில் சார்ந்த சிந்தனைகள் என்னிடம் அதிகம் உண்டு. அதில் தான் என் முழு ஈடுபாடும் உள்ளது.
வெற்றி தோல்விகளை விட அதன் சவால்களை நான் அதிகம் விரும்புகிறேன்.
எட்டு மணி நேர வேலைகளை வெறுக்கின்றேன்.

3. நான் தொழிலதிபராக விரும்பவில்லை?

தற்போதைய தொழில்கள் என்பது சூதாட்டம் போலவே உள்ளது. நம் முதலீடே நமக்கு வந்து சேருமா? என்று பயமாக உள்ளது.
தொழில்கள் அனைத்தும் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பது கடினம். தரத்தினை விட விளம்பரங்கள் மூலம் மட்டுமே தொழில்கள் இயக்குகின்றது.
உழைக்கும் சமூகம் குறைந்து விட்டது.
நாணயம் என்பதனை தொழிலில் பார்க்க முடியவில்லை.
வங்கிகள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.
GST பெரும் பிரச்சனையாக உள்ளது.
என் வயது 50. இனி நான் ரிஸ்க் எடுக்க முடியாது. விரும்பவில்லை.

4. தொழிலதிபராக மாற அடிப்படைக் குணம் என்ன தேவை?

பதிலை நீங்கள் உங்கள் மனதிற்குள் வைத்துக் கொண்டு தொடருங்கள். “வெற்றி தோல்விகளை விட அதன் சவால்களை விரும்புகிறேன்” என்பவர்கள் மேற்கொண்டு தொடரவும். “சூழல் புரிந்து அனுசரிக்கும் பொறுமை என்னிடம் இல்லவே இல்லை” என்பவர்கள் வேறு வேலை இருந்தால் பார்க்கவும்.

தொழிலே தெய்வம் பள்ளியில் படிக்கும் போது நிச்சயம் இந்தக் கேள்வி உங்களிடமும் கேட்கப்பட்டிருக்கும். “எதிர்காலத்தில் நீ என்னவாக ஆகப் போகின்றாய்?” மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், வழக்குரைஞர், தொழில்நுட்ப வல்லுநர், விஞ்ஞானி வரைக்கும் ஒவ்வொருவரின் வெவ்வேறு விதமான ஆசைகள் கேட்டிருப்போம். கலைகள் குறித்தோ வணிகம் சார்ந்த ஆசைகளை ஒருவர் கூடச் சொல்லியிருக்கமாட்டார்கள். ஒருவர் கூட நான் தொழில் அதிபர் ஆகப் போகின்றேன் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள். காரணம் இன்றைய தமிழர்கள் வணிகத்தை விட்டு வெளியே வரவே விரும்புகின்றார்கள். எப்படி விவசாயத்தை விட்டு இரண்டாவது தலைமுறை வெளியே வந்து விட்டதே வணிகமும் வேண்டாத ஒன்றாக ஆகிக் கொண்டு வருகின்றது. யார் முதலிடத்தில் இருக்கிறார்?. உலகப் பணக்காரர், இந்தியப் பணக்காரர், தமிழ்நாட்டுப் பணக்காரர் என்று நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டாலும் நம் எண்ணங்கள் மாறுவதில்லை. மாறினாலும் குடும்பத்தினர் ஆதரிப்பதில்லை. உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? தனியார் என்றாலும் பரவாயில்லை. ஒரு வேலைக்குப் போய்விடு? அரசு வேலைக்குப் பணம் கொடுத்துப் போனாலும் தப்பில்லை. வெளிநாட்டுக்கு முயற்சி செய். கடந்த 30 ஆண்டுக்காலத்தில் உருவான தலைமுறைகள் அனைத்தும் இப்படியே உருவாக்கப்பட்டு இன்று உலகம் முழுக்க பரவியுள்ளனர். வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கேயும் அடிமை உத்தியோகம். அளவான வருமானம். சுகமான வாழ்க்கை. அதற்கு “நிம்மதி” என்று பெயரிட்டுள்ளனர். புத்திசாலித்தனம் என்று பாராட்டுகின்றார்கள்.
ஆனால் குஜராத்திகளும், மார்வாடிகளும் உலகம் முழுக்க பரவினாலும் செல்லும் இடமெங்கும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க, வளர்க்கவே விரும்புகின்றார்கள். அடிமைத் தொழில் என்பது அவர்களுக்கு ஆகாது. இன்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா வரைக்கும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளவர்கள் உருவாக்கிய தொழிலும், அடைந்த உயரமும் ஆச்சரியமானது. தமிழர்கள் வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை வசதிகளை விரும்புகின்றோம்.

ஆனால் எவரும் வணிகராக விரும்புவதில்லை. முதல் காரணம் பயம். முக்கியக் காரணம் நிரந்தரமின்மை. ஆனால் இந்தியாவில் கடந்த இருபது நூற்றாண்டுக் காலச் சரித்திரத்தில் 18 ஆண்டுக் காலம் வணிக சாம்ராஜ்யங்களைக் கட்டி எழுப்பியவர்கள், தமிழர்களே. தமிழர்கள் தான் வணிகத்தின் வழிகாட்டியாக இருந்தவர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். முதல் 13 நூற்றாண்டுகள் வரைக்கும் இந்தியாவில் தமிழர்கள் தான் வணிகத்தில் உச்சநிலையிலிருந்தார்கள். தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வட இந்தியர்கள் கைக்குப் போனது. அதுவே தொடர்ந்தது. தொடர்கின்றது. இன்று இந்தியா முழுக்க அவர்கள் கைகள் தான் ஓங்கியுள்ளது. வட இந்தியர்கள் தங்களுக்கான இடத்தை அடைந்தனர். உழைத்தனர், வளர்த்தனர். இன்று இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றனர்.
பொருளாதாரம் உள்ள சமூகம் மட்டும் தன் மொழியை, பண்பாட்டுக் கலாச்சாரத்தை வாழ வளர வைக்க முடியும். அதிகாரம் எங்கு இருந்தாலும் அதனை தனக்குச் சாதமாக மாற்ற முடியும். பொருள் உள்ளவர்களிடம் மொத்த சமூகமும் பணிந்து நிற்கும் வாழ்த்தும், வணங்கும். பொருளாதார அதிகாரமென்பது சர்வவல்லமை படைத்தது. ஆக்க, அழிக்க, மாற்ற முடியும். அரசியல் அதிகாரமென்பது வெறும் கூலி மட்டுமே. போட்டி இருந்தால் தான் சவால். சவாலை வென்றால் தான் சாதனை. சாதனையை வென்றால் மட்டுமே மகுடம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here