Home கட்டுரை விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்தது ரிசர்வ் வங்கி ! தகவல்...

விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்தது ரிசர்வ் வங்கி ! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள ரிப்போர்ட்..

319
0
RBI
Share

வங்கியில் அதிகளவு கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா உட்பட 50 தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது ரிசர்வ் வங்கி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள தகவல் படி 68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் எந்த தொழிற்சாலைகளும் செயல்படாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நிலையை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் தற்போது கடன் திரும்பி செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு ஓடிய நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கிட்டத்தட்ட 90000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். Vijay mallay

இதே போல் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

இதே போல் பல தொழில் அதிபர்களும் பல கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.

இப்படி கடன் வாங்கி மோசடி செய்து தப்பி ஓடிய பல தொழில் அதிபர்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் உள்ள முதல் 50 பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அவருக்கு பதில் அளித்துள்ளது.RbiLIst

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளது.

அதன் விவரங்கள் :

மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.

ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.

வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி

ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி

குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி

ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி

சோயா -ரூ.2,212 கோடி

சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி

பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி

மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா

நிறுவனங்கள் -ரூ.1,447 கோடி, மற்றும் ரூ.1,109 கோடி.

என தள்ளுபடி தொகை மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here