Home செய்திகள் இந்தியா சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

411
0
Share

சட்டப்படிப்பு படிப்பதற்காகக் காமன் லா அட்மிஷன் டெஸ்ட் எனும் கிளாட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது மாணவர்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி, நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா, நேஷனல் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி உள்பட 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரிகளும் இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களைச் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த LLB இளநிலை சட்ட படிப்பிற்கு இந்த தேர்வு மதிப்பெண்கள் தான் உதவுகிறது.

தற்போதைய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 2 முறை இந்த கிளாட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழு இத் தேர்வை மீண்டும் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் மறு தேர்வு தேதியும் அறிவிக்கப்படுவதால் எப்போது நடக்கும் என்று காத்திருக்கின்றனர்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here