Home செய்திகள் இந்தியா கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் பிளாஸ்மா முயற்சி !

கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் பிளாஸ்மா முயற்சி !

315
0
aravindh
Share

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை இந்நிலையில் ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முயற்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் டெல்லி மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டம் தான் பிளாஸ்மா வங்கி.
இந்த பிளாஸ்மா வங்கி ஹெல்பிஎஸ் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்த ஒரு நோயாளிகள்  வேண்டுமானாலும் இந்த பிளாஸ்மா முறையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன் பிறகு பேசிய அவர் :
நீங்கள் பிளாஸ்மா தானம் செய்ய விரும்பினால் 1031 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது என்ற 8800007722 வாட்ஸ்அப் நம்பருக்கு உங்கள் தகவலை அனுப்பவும். அதன் பிறகு டாக்டர் உங்களைத் தகுதி பரிசோதித்து பிளாஸ்மா தானம் செய்வது குறித்து விவரத்தைத் தெரிவிப்பார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் குணமடைந்தவர்களின் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் இந்த பிளாஸ்மா தானம் செய்யலாம். உடல் எடை 50 கிலோவிற்குக் குறைவாகவும், கர்ப்பிணிப் பெண்களும், வயதானவர்களும், ஏதாவது நிரந்தர நோய் கொண்டவர்களும் இந்த பிளாஸ்மா தானம் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here