Home செய்திகள் இந்தியா 10 – ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதிகை T.V யில் பாடம் நடத்த திட்டம் !

10 – ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதிகை T.V யில் பாடம் நடத்த திட்டம் !

569
0
Tamilnadu
Share

10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பொதுத் தேர்வு நடக்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்களைத் தேர்வுக்குப் பயிற்சி அளித்து தயார் செய்யும் வகையில் இன்று (15.4.2020) முதல் டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பாடங்கள் ஒளிபரப்பப்படவுள்ளது.

குறிப்பு : ஏற்கனவே கல்வி தொலைக்காட்சியில் இந்த  தொகுப்பு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழகத்தில் மார்ச் மாதம் 27-ஆம் தேதி அன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 144  ஊரடங்கு உத்தரவினால் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு 10-ஆம் வகுப்பு பாடங்கள் கல்வி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.students

இப்போது அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள்  பயன்பெறும் வகையில் இன்று முதல் (15.4.2020) பொதிகை தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 10மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு பாடவாரியாக ஒளிபரப்ப உள்ளது.

10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  தற்போது உள்ள இந்த ஊரடங்கை பயன்படுத்தி தேர்விற்கு தங்களைத்              தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த முயற்சியை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்ட பிறகு மே 2 வது வாரத்தில் தேர்விற்கு விடுமுறைகள் ஏதும் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாட்களுக்குள் பொதுத்தேர்வினை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here