Home செய்திகள் இந்தியா பாராசிட்டமால் மருந்துகள் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ! நீதிமன்றம் உத்தரவு…

பாராசிட்டமால் மருந்துகள் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ! நீதிமன்றம் உத்தரவு…

401
0
Share

கொரோனா வைரசுக்குக் காய்ச்சல்,இருமல், ஜலதோஷம், சளி ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொடுக்க மறுத்து வந்தனர்.

தற்போது பருவமழை காலம் தொடங்கியதை அடுத்து ஏராளமானோர் ஜலதோஷம், சளி, சாதாரண காய்ச்சல் போன்றவற்றிற்கு பாராசிட்டமால் மாத்திரை வாங்க மருந்தகங்களை அணுகினால் அங்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தர மறுக்கின்றனர் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதை மீறி வாங்கிச் செல்வோரது வீட்டு முகவரியும் அவர்களது அலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்தும் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய மதுரை கிளை நீதிமன்றம் தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

இது குறித்து தமிழக அரசைத் தெரிவித்திருப்பதாவது : தமிழக அரசு சார்பில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டாமால் மருந்து வழங்கக்கூடாது என்று எந்த ஒரு அறிவிப்பும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை மதுரை கிளை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. எனவே அனைத்து மருந்துகளும் பாரசிட்டமால் மாத்திரைகள் தடையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here