Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் டாஸ்மாக்ல் இருந்து ஆன்லைன் மது விற்பனை… வாட்ஸ் ஆப்ல் தீயாய் பரவும் இணையதள முகவரி ?

டாஸ்மாக்ல் இருந்து ஆன்லைன் மது விற்பனை… வாட்ஸ் ஆப்ல் தீயாய் பரவும் இணையதள முகவரி ?

318
0
high court
Share

கொரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து 3ம் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 17 வுடன் முடிவடைகிறது.
இந்த 3ம் கட்ட ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் மே 7 முதல் கொரோனா தொற்று அதிகம் பாதிக்காத இடங்களில் மதுபானக் கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது . இதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
Tasmac Updates
ஆனால் மது பிரியர்கள் கட்டுப்பாடுகளைச் சரியாக கடைப்பிடிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் “டாஸ்மாக் திறப்பதற்கு அரசு விதித்த சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன எனவும். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது, என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிமன்றம், “ஊடரங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. வேண்டுமானால்  ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து கொள்ளலாம்,” என்று உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து  தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது. இத்தகைய  சூழலில் தமிழகத்தில் ஆன்லைனில்மது விற்பனை எனப் பல இணையதள முகவரிகள் வாட்ஸ்அப்பிலும் சமூக வலைத்தளங்களில்   தீயாய் பரவி வருகிறது. ஆனால், இப்படிப் பரவும் இணையதள முகவரிகளும் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மதுபிரியர்கள் அது போன்ற இணையதளங்களில் சென்று தங்கள் பணத்தை ஏமார்ந்து வருகின்றனர். காவல் துறையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி அளித்துக் கொண்டு தான் உள்ளனர். இருப்பினும் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here