Home முகப்பு முக்கிய செய்திகள் பள்ளிகளில் மீதமாகும் உணவுகள்: அமெரிக்காவில் புதிய சட்டம் அமல்

பள்ளிகளில் மீதமாகும் உணவுகள்: அமெரிக்காவில் புதிய சட்டம் அமல்

388
0
Share

போர்ட்லாந்து

பள்ளிகளில் மீதமாகும் உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க, அமெரிக்க நகரங்கள் சிலவற்றில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடற்கரை நகரமான ஒரிகானில் போர்ட்லாந்து உள்ளது. இங்குள்ள பள்ளிகளில் மீதமாகும் உணவுப் பொருட்களை வீணாக்காமல், பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.

மனித உணவின் மிச்சங்களை, பன்றிகளுக்குக் கொடுப்பது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால், பள்ளிகளில் மீதமாகும் உணவை பன்றிகளுக்கு வழங்கும் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. மைன் சட்டப்பேரவையில் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த செப். 19-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் பள்ளிகளில் வீணாகும் உணவின் அளவைக் குறைக்க முடியும் என்றும் பன்றிகளுக்கு உணவு எளிதில் கிடைக்கும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சட்டத்தின் மூலம் தனி நபரோ அல்லது பள்ளி உள்ளிட்ட நிறுவனமோ பன்றிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு தங்களின் உணவுக் கழிவுகளை வழங்க முடியும்.

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here