Home செய்திகள் இந்தியா AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ச்சலைக் கண்டறிய புதிய சன் கிளாஸ்! சீனா புதிய முயற்சி…

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ச்சலைக் கண்டறிய புதிய சன் கிளாஸ்! சீனா புதிய முயற்சி…

395
0
AI
Share

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் நாசங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை மட்டும்  உலகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாடான சீனாவில், தற்போது படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டுவிட்டது. மேலும் சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ரோகிட்’ காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவியை வடிவமைத்துள்ளது.

இக்கண்ணாடிகளை ஜனவரி மாதம் முதலே, ஹாங்ச்சாவு (Hangzhou) நகரில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கிவந்துள்ளது. இந்தக் கண்ணாடி மூலம் இரண்டே நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மக்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் எடை100 கிராம் தான். மேலும், இந்தக் கண்ணாடிகள் பார்ப்பதற்கு சாதாரண கண்ணாடி போன்று உள்ளது. ஆனால், வெப்பநிலையைக் கண்டறிவதற்காக இதல் கூடுதலாக தெர்மல் இமேஜிங் கேமரா மற்றும் கேபிள் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, ஏற்கெனவே பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது இப்படி காய்ச்சலைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஹாங்யூஹான்(Hongyuan) பூங்காவில் வேலை செய்யும் பாதுகாப்புப் பணியாளர்கள், மக்களின் வெப்பநிலையைக் கண்காணித்து கொண்டிருக்கின்றனர்.

இதை அணிந்துகொண்டு ஒரு மீட்டர் தொலைவிலிருந்தே உங்களால் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். ஏனென்றால் வெப்பத்தைக் கண்டறியும் AR (augmented reality) திறனே ஆகும். இந்தக் கண்ணாடி பயன்படுத்தி அதிக உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டால், உடனே எச்சரிக்கை அளிக்கிறது. இவற்றோடு, அந்த நபரின் முக அடையாளத்தை சேமிக்கும் ஃபேஷியல் ரெகக்னைசன் தொழில்நுட்பமும் உள்ளது. மேலும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் டிஜிட்டல் வழியே சேகரித்துக்கொள்கிறது .

கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டறிய ஒவ்வொரு நாடும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து  உள்ளன. இந்தத் தொற்றின் முதல் அறிகுறியாக காய்ச்சல் உள்ளது. இந்தக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவுக் கண்ணாடி சோதனை முறையை இன்னும் சுலபமாக்கியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here