Home செய்திகள் இந்தியா டிக்டாக் செயலிக்குப் போட்டியாக புதிய இந்தியச் செயலி !

டிக்டாக் செயலிக்குப் போட்டியாக புதிய இந்தியச் செயலி !

484
0
chingari
Share

பொதுவாகவே கேம் சம்பந்தமான செயலியைத் தவிர மற்ற எந்த செயலிகளும் பெரிதளவு பிரபலமாகவில்லை. ஆனால் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக் டாக் செயலி அனைத்து நாடுகளிலும் பிரபலமடைந்தது. அதிலும் இந்தியாவில் இந்த செயலியைப் பயன்படுத்தாத நபர்கள் காண்பது அரிது.
இந்த இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 15 கோடி புதிய பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் அதில் ஐந்தில் ஒருவர் இந்தியர் தான் ஏனெனில் அனைத்து மொழிகளிலும்  கிடைக்கும் பாடல்களை வைத்து வீடியோ எடுத்து தங்கள் திறனை வெளிப்படுத்துகின்றனர்.
சீனாவும் இந்தியாவும் எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது டிஜிட்டல் உலகில் புதிய செயலியை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிக்டாக்ற்கு போட்டியாக இந்த செயலி அமையும் என்றும், அந்த செயலின் பெயர் சிங்காரி என்றும் தெரிவித்துள்ளனர்.
பிஸ்வாட்மா நாயக் தனது நண்பரின் சித்தார்த் கௌதம் உடன் இணைந்து இந்த செயலியை உருவாக்கினர். இந்த செயலில் டிக்டாக்கை போன்றே தங்கள் திறனைப் பதிவு செய்து இதில் பதிவிடலாம்.
மேலும் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் புது புது நண்பர்களைத் தேடி அவர்களுடன் அரட்டை அடிக்கலாம். அப்போதைய செய்திகள் கிடைக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சிறு சிறு விளையாட்டுகளும் அதில் பணமும் கிடைக்கும் படியும் தயாரித்துள்ளனர். அதே போல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தாங்களே உருவாக்கி வைத்துக் கொள்ள வசதிகள் உள்ளன.
அது மட்டுமின்றி இந்த செயலியில் உங்கள் வீடியோ பதிவேற்றம் செய்யும் போது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பார்வையிட்டால் தங்களுக்கு ரிவார்ட் பாயிண்ட் கொடுக்கப்படும். அதனைப் பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி டிக்டாக்கில் கிடையாது. இது சிங்காரிக்கு ஒரு நல்ல பலமாக அமைந்துள்ளது. மேலும் இந்த உள்ள செய்திகள் விளையாட்டு இவை அனைத்தும் கூடுதல் பலம் சேர்க்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தி English, தமிழ் எனப் பலமொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
இந்த செயலி வெளியீடான ஒரு மாதத்திற்குள்  50 லட்சத்திற்கும் அதிகமான  பயனர்கள் பதிவிறக்கம்  செய்துள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here