Home செய்திகள் இந்தியா SHAREIT செயலுக்கு மாற்றாக புதிய செயலி ! அசத்தும் இந்தியச் சிறுவன்..

SHAREIT செயலுக்கு மாற்றாக புதிய செயலி ! அசத்தும் இந்தியச் சிறுவன்..

423
0
Share

இந்தியா-சீனா லடாக் எல்லையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்தியாவில் சீனப் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைத்தது. அதைத் தொடர்ந்து தரவுகள் திருடப்படுவதாகவும், பாதுகாப்பு நலன் கருதி சீன நாட்டுடன் தொடர்புடைய 59 மொபைல் செயலிகளை தடைசெய்தது மத்திய அரசு.

அதன் பிறகு அதற்கு மாற்றாக ஏராளமான புதிய செயலிகள் வருகை அதிகரித்து வந்தது. அந்த வகையில் தற்போது தரவுகள் பரிமாற்றம் செயலியாக இருந்த SHAREIT க்கு மாற்றாகக் காஷ்மீரைச் சேர்ந்த இளம் சிறுவன் அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

SHAREIT தடை செய்த பிறகு தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் மக்கள். இதற்காக அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்ற 17 வயது சிறுவன் Dodo Drop App என்ற ஒரு செயலியை உருவாக்கி உள்ளார்.

இந்த செயலி மூலம் ஆடியோ, வீடியோ, படங்கள், உரைகள், கட்டுரைகள், என அனைத்து விதமான தகவல்களும் பரிமாறிக் கொள்ளலாம் இதற்காக இணையம் தேவையில்லை என்று ANI தொலைக்காட்சியில் இவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை உருவாக்குவதற்காக 4 வாரங்கள் தொடர்ந்து பணி புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இச்செயலி 480Mbps வரை பரிமாற்ற வேகத்தை அனுசரிக்கும் என்று கூறியுள்ளார். இந்த வேகம் SHAREIT விட அதிகமாக உள்ளது என்றும் பரிமாறும் நேரம் மிகக் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியில் தரவுகள் பரிமாறும் போது என்கிரிப்ட் செய்யும். இதனால் தகவல் பாதுகாப்பாகப் பரிமாறப்படும் என்றும் அச்சிறுவன் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here