Home ஆன்மீகம் நவகிரக ராசிநாதனும், ராசிகளும்….

நவகிரக ராசிநாதனும், ராசிகளும்….

2054
0
Share

நவகிரக வாசிகள் என்று கூறப்படும் கடவுள்களில் 12 ராசிகளுக்கு அதிபதியாக ஒவ்வொருவரும் இருந்து வருகின்றனர். இதில் எந்தெந்த ராசிகளுக்கு எந்த கடவுள்கள் அதிபதியாக இருந்து பலன்களை வாரி வழங்குகின்றனர் என்று பார்ப்போம்..

சூரியன் பகவான் : இவர் காசியப முனிவரின் புத்திரர். தீப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் வகிப்பவர். இவர் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் வீற்றிருப்பவர்.

சந்திர பகவான் : பாற்கடலில் உதித்தவர். வளர்பிறையில் நன்மை அளிப்பவராகவும், தேய்பிறையில் சங்கடம் வழங்குபவராகவும் விளங்குபவர். கடக ராசிக்காரர்களுக்கு அதிபதி.

அங்காரகன் (செவ்வாய்): இவர் வீரபத்திரரின் அம்சம். சுப்பிரமணியரை தெய்வமாக்க ஏற்றவர், பாவத்திற்கு பலனைக் அளிக்கும் குரூரர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிபதி.

புதன்: இவர் சந்திரனுடைய புத்திரர். தீய சக்தியால் ஏற்படும் தடைகளை அழிக்கும் ஆற்றல் மிக்கவர். மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிபதி.

குரு: தேவ குரு என்னும் பெயர் கொண்டவர். இவருடைய பார்வையிட்டால் , தோஷங்கள் அனைத்தும் விலகும். பூரண நன்மை அடைவர். தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

சுக்கிரன்: இவர் அசுர இனத்திற்கு குரு ஆவார். ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிபதி.

சனி: இவர் சூரியனுடைய புத்திரர். பாவ பலன் தருவதிலும் நல்வழிப் படுத்துவதிலும் சக்கரவர்த்தி ஆவார். மேலும் சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை எனப் பழமொழி கூட உள்ளது. மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அதிபதி.

ராகு: இவர் அசுரத் தலையையும் , நாக உடலையும் அமைப்பாக உடையவர். மிக்க வீரம் கொண்டவர். கருநாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

கேது: இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். இவரும் ராகுவும் சகோதரர் என்றும் கூறுவர்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here