Home செய்திகள் இந்தியா மசராட்டி எம்சி20 சூப்பர்கார் அறிமுகம்…

மசராட்டி எம்சி20 சூப்பர்கார் அறிமுகம்…

310
0
Share

மசராட்டி எம்சி20 சூப்பர் கார் மாடல் தற்போது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முழு விவரங்களைப் பார்ப்போம்.
இத்தாலி நாட்டு பிரத்யேக ஆடம்பர கார் தயாரிப்பாளரான மசராட்டி சர்வதேச சந்தையில் எம்சி20 என்ற சூப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மசராட்டி எம்சி20 – மசராட்டி கோர்ஸ் 2020 மாடலின் விரிவாக்கம். இது மசராட்டி புது தலைமுறையின் அடிப்படையில் களமிறங்குவதைக் குறிக்கிறது.

புதிய எம்சி20 வடிவமைப்பு எம்சி12 மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எம்சி20 மாடலில் புதிதாக வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் நியூடெனோ என அழைக்கப்படுகிறது. இது மொடெனாவில் உள்ள மசராட்டி மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த புதிய என்ஜின் காப்புரிமை பெறப்பட்ட எஃப்1 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் பிரீ-கம்பஷன் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. 3.0 லிட்டர் என்ஜின் 622 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வரை அளிக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் மரணமடைந்தார் !

இந்த சூப்பர்காரை மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் இது மணிக்கு 325 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here